என் மலர்
செய்திகள்

சிங்கங்கள்
கொரோனா பாதித்த 12 சிங்கங்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தனிக்குழு
சிங்கங்களுக்கு தேவையான இறைச்சிகள் வண்டலூரில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அந்த இறைச்சிகள் மூலம் நோய் பரவியதா? என்ற கோணத்திலும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தாம்பரம்:
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 20.4.2021 முதல் அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26.5.2021 அன்று பூங்காவில் இருந்த 5 சிங்கங்கள் சரியாக உணவு சாப்பிடவில்லை. மேலும் தொடர் இருமல் இருந்தது.
கால்நடை மருத்துவ குழுவினர் 13 ஆசிய சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயிர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற 12 சிங்கங்களும் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளன. அதன் உடல் நிலை, நடவடிக்கை குறித்து கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதில் சில சிங்கங்களுக்கு உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. வழக்கமான நிலையில் இருப்பதாக பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்காணிப்பில் இருக்கும் சிங்கங்களின் இருப்பிடம் அருகே மற்ற ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் மற்றும் அதன் பராமரிப்பாளர்கள் மட்டும் அடிக்கடி சென்று சிங்கங்களின் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஒவ்வொரு சிங்கத்தையும் கண்காணிக்க தனியாக விலங்கு காப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கவச உடை அணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிங்கங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே ஊழியர்களிடம் இருந்து விலங்குகளுக்கு நோய் தொற்று பரவியதா? என்பது தெரியவரும்.
மேலும் சிங்கங்களுக்கு தேவையான வழக்கமான இறைச்சிகள் வண்டலூரில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அந்த இறைச்சிகள் மூலம் நோய் பரவியதா? என்ற கோணத்திலும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் கண்காணித்து வருவதாக பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த அதிகாரி கூறியதாவது:-
கொரோனா பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிங்கங்களையும் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விலங்கு காப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவிறுத்தலின்படியும் முன் எச்சரிக்கையின்படியும் தொடர் கண்காணிப்பில் அவற்றின் அறிவுரைகளின்படி பின்பற்றி வருகிறது.
பூனையினங்கள், நாயினங்கள், புனுகுப் பூனையினங்கள் மற்றும் வாலில்லா குரங்கினங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஐதராபாத் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் மற்றும் புரோனக்ஸ் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்களின் அறிவுரைப்படி நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆய்வக முடிவில் பாசிட்டிவ் என முடிவு வரப்பட்ட சிங்கங்களுக்கு மிக நுண்ணிய அளவில் கண்காணிப்பும், அறிவுறுத்தப்பட்ட சிகிச்சைகளும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக்குழுவினருடன் இணைந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விலங்கு கூடங்களில் பணிபுரியும் அனைத்து விலங்கு காப்பாளர்களுக்கும், கொரோனா நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிங்க குழுவிற்கும் தனிப்பட்ட ஒரு குழுவாக விலங்கு காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 20.4.2021 முதல் அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26.5.2021 அன்று பூங்காவில் இருந்த 5 சிங்கங்கள் சரியாக உணவு சாப்பிடவில்லை. மேலும் தொடர் இருமல் இருந்தது.
கால்நடை மருத்துவ குழுவினர் 13 ஆசிய சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயிர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 13 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதற்கிடையே பூங்காவில் சிங்க உலாவிட இருப்பிடம் 2-ல் இருந்த 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம் திடீரென இறந்தது. அந்த சிங்கத்திற்கு மூக்கில் இருந்து திரவம் போல் தொடர்ந்து சுரந்து வந்துகொண்டிருந்தது.
இதையும் படியுங்கள்...வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி
கண்காணிப்பில் இருக்கும் சிங்கங்களின் இருப்பிடம் அருகே மற்ற ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் மற்றும் அதன் பராமரிப்பாளர்கள் மட்டும் அடிக்கடி சென்று சிங்கங்களின் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஒவ்வொரு சிங்கத்தையும் கண்காணிக்க தனியாக விலங்கு காப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கவச உடை அணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வண்டலூர் பூங்காவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 200 பேருக்கும் மேல் தடுப்பூசி போட்டுள்ளனர். விலங்குகளை பராமரிக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

Next Story