search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் 23,625 பேருக்கு சிகிச்சை- 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பில் அண்ணாநகர் மண்டலம் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இந்த மண்டலத்தில் 2,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்தபடி உள்ளது. நேற்று மட்டும் 9,344 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 123 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். 23 ஆயிரத்து 625 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நோய் தொற்று காரணமாக சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 386 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    காய்ச்சல் பரிசோதனை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிவது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பில் அண்ணாநகர் மண்டலம் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இந்த மண்டலத்தில் 2,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தேனாம்பேட்டை மண்டலம் முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது அண்ணாநகர் மண்டலம் நோய் தொற்றில் முதல் இடத்துக்கு சென்றுள்ளது.

    இதேபோல் ராயபுரம், திரு.வி.க.நகர், கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் தண்டையாரபேட்டை, அடையாறு, பெருங்குடி, அம்பத்தூர் ஆகிய மண்டலங்களிலும் நோய் தொற்று பரவல் கடந்த சில நாடகளாக அதிகரித்துள்ளது. மொததத்தில் நோயால் பாதிக்கபபட்டு உள்ளவர்கள் சதவீதம் 8 ஆக உள்ளது

    சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் விபரம் வருமாறு:-

    திருவொற்றியூர்-592

    மணலி-252

    மாதவரம்-949

    தண்டையார்பேட்டை-1,689

    ராயபுரம்-2,133

    திரு.வி.க.நகர்-2,036

    அம்பத்தூர்-1,615

    அண்ணாநகர்-2,576

    தேனாம்பேட்டை-2,569

    கோடம்பாக்கம்-2,067

    வளசரவாக்கம்-1,193

    ஆலந்தூர்-1,086

    அடையாறு-1,542

    பெருங்குடி-1,284

    சோழிங்கநல்லூர் - 632

    Next Story
    ×