search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பற்றி எரிந்த தீயை காணலாம்
    X
    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பற்றி எரிந்த தீயை காணலாம்

    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் கம்பெனியில் தீ விபத்து

    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் கம்பெனியில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென விபத்து ஏற்பட்டது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் வெள்ளை சிமெண்ட் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று வேலை முடிந்ததும் ஊழியர்கள் சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் பெருந்துறை நிலைய அதிகாரி ரவிந்திரன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர்.

    அப்போது தனியார் நிறுவனம் முழுவதும் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் காலை 8 மணி வரை போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.

    இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள் மற்றும் பி.வி.சி. பைகள் எரிந்து சேதமானது. சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது தெரியவந்தது.


    Next Story
    ×