என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாகர்கோவிலில் லாட்ஜில் விபசாரம்- 5 பேர் கைது

    நாகர்கோவிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்ஜில் விபசாரம் நடத்திய 5 பேரை கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக வடசேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது லாட்ஜில் 3 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்ட கோட்டாரை சேர்ந்த திரவியம் (வயது 62), ராஜப்பன், சாம்சன், சேகர் மற்றும் ரமே‌‌ஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திரவியம் என்பவர் லாட்ஜ் மேலாளர் என்பது தெரியவந்தது. ராஜப்பன் என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். மற்ற 3 பேரும் பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்க வந்ததாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஏழை பெண்களிடம் பண ஆசை காட்டி ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×