என் மலர்

  செய்திகள்

  முகாமில் நடைபயிற்சி மேற்கொள்ளும் யானைகள்.
  X
  முகாமில் நடைபயிற்சி மேற்கொள்ளும் யானைகள்.

  காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வன அதிகாரிகளுடன் 70 பேர் பாதுகாப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வன அதிகாரிகளுடன் 70 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  கோவை:

  கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் 9-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. 26 கோவில் யானைகள் முகாமிற்கு வந்துள்ளது.

  தேக்கம்பட்டி யானைகள் முகாமை சுற்றி வனப்பகுதியாக உள்ளதால் வனத்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  முகாமிற்கு வன பாதுகாவலர், கார்டுகள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாமில் உள்ள யானைகளின் சத்தத்தைக் கேட்டும், காட்டு யானைகளின் வாசத்தை வைத்தும் அவை முகாமுக்குள் நுழைவதை தடுக்க கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

  முகாமை சுற்றி வனப்பகுதிகளில் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து உள்ளோம். ஒரு கோபுரத்தில் 6 பேர் வனப்பகுதியை டார்ச்லைட் கொண்டு கண்காணிப்பார்கள். முகாமிற்குள் 5 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  மேலும் காடுகள் குறித்து அனுபவம் உள்ள 70 பேரை தினக்கூலியாக சேர்த்து உள்ளோம். அவர்கள் காட்டு யானைகளிடம் இருந்து வரும் வாசத்தை வைத்து காட்டு யானை எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை கணித்து விடுவார்கள்.

  அப்போது காட்டு யானை வனத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன்பே வனத்துறையினர் அங்கு சென்று டார்ச்லைட் மூலம் விரட்ட முயற்சி செய்வார்கள். யானை காட்டுக்குள் செல்லவில்லை என்றால் வானத்தை நோக்கி ராக்கெட் பட்டாசு வெடிக்கப்படும்.

  அதன் பின்னரும் யானை செல்லவில்லை என்றால் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு விரட்டப்படும். இந்த பலத்த பாதுகாப்பை மீறி காட்டு யானை முகாம் அருகே வர வாய்ப்பில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மேலும் தீயணைப்பு படை வீரர்கள் 14 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முகாமில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை உடனே அணைக்க தீயணைப்பு வாகனம் முகாமிற்குள் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றையொட்டி முகாம் உள்ளதால் பாதுகாப்புக்கு ஒரு நவீன படகும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×