என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்குவாரி
    X
    கல்குவாரி

    கல்குவாரியில் கற்கள் சரிந்து 2 பேர் பலி- ஏராளமானோர் இடிபாட்டில் சிக்கி தவிப்பு

    உத்திரமேரூர் அருகே குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மாத்தூர் பகுதியில் கல் குவாரி உள்ளது.

    இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது கல்குவாரியில் இருந்த கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.

    இதில் மூச்சு திணறியும், படுகாயம் அடைந்தும் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் கற்குவியலுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த கற்குவியலுக்குள் மேலும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×