என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவாஹிருல்லா
    X
    ஜவாஹிருல்லா

    மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி- ஜவாஹிருல்லா

    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
    கடலூர்:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பாதாக கூறி மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.

    குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இந்த தேர்தலில் எங்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.

    புதுவையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×