search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நகராட்சி ஊழியர் ஒருவர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ததை காணலாம்
    X
    ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நகராட்சி ஊழியர் ஒருவர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ததை காணலாம்

    நீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள்

    நீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    ஊட்டி:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-1 எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி இங்குள்ள ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேர், பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பேர், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 356 பேர் என மொத்தம் 1,016 பேர் தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் ஆதார் கார்டை இணைத்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.

    கொரோனா காரணமாக தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தேர்வு எழுத வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரிய வந்தால், அவர்களை தனியாக தேர்வு எழுத வைக்க ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் அறை ஒதுக்கப் பட்டு உள்ளது. தேர்வு எழுதுபவர்கள், தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வருகை தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 2 புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×