search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் மாற்றம்
    X
    இன்ஸ்பெக்டர் மாற்றம்

    விருத்தாசலம் சிறையில் கைதி மரணம்- போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

    விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் ஒரு திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்.

    எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விசாரணை முறையாக நடைபெற வில்லை என்று பிரேமா தனது கணவரின் உடலை வாங்கமறுத்து உறவினர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருத்தாசலம் கிளை சிறையில் உள்ள காவலர்கள், விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் அதிரடியாக கடலூர் முதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் நெய்வேலி டவுன்ஷிப்புக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×