என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு- ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்

    புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் விஞ்ஞானிகள் நடத்திய இரண்டாவது ஆய்வில், 698 நபர்கள் பங்கேற்றனர். அவர்களில் நோய் தொற்று எதிர்ப்பு திறன் 20.7% பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    நோய் தொற்றின் தாக்கம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏறத்தாழ சமமாக உள்ளது. ஆண்களில் 21 புள்ளி 4 சதவீதமாகவும், பெண்களில் 20 சதவீதமாகவும் உள்ளது. 
    Next Story
    ×