என் மலர்

  செய்திகள்

  திமுக
  X
  திமுக

  சென்னையில் நாளை மறுநாள் தி.மு.க. முப்பெரும் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. முப்பெரும் விழா நாளை மறுநாள்(15-ந்தேதி) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது.
  சென்னை:

  தி.மு.க. முப்பெரும் விழா நாளை மறுநாள்(15-ந்தேதி) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது.

  விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமை தாங்குகிறார். சிற்றரசு வரவேற்று பேசுகிறார்.

  விழாவில் மா.மீனாட்சி சுந்தரத்துக்கு பெரியார் விருது, முனைவர் ராமசாமிக்கு அண்ணா விருது, எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு கலைஞர் விருது, ஆ.தமிழரசிக்கு பாவேந்தர் விருது, சுப.ராஜகோபாலுக்கு பேராசிரியர் விருது ஆகிய 5 விருதுகளையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

  விழாவில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுசெயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
  Next Story
  ×