என் மலர்

  செய்திகள்

  மெக்சிகோ நாட்டுப்பெண் செசில்லா- ஆயுள் தண்டனை பெற்ற மெக்சிகோவை சேர்ந்த மார்ட்டின்
  X
  மெக்சிகோ நாட்டுப்பெண் செசில்லா- ஆயுள் தண்டனை பெற்ற மெக்சிகோவை சேர்ந்த மார்ட்டின்

  மனைவியை கொன்று எரித்த மெக்சிகோவை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆராய்ச்சி படிப்புக்கு வந்த இடத்தில் மனைவியை கொன்று உடலை எரித்த மெக்சிகோவை சேர்ந்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
  மதுரை:

  மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் (வயது 40). இவர் அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணான செசில்லா அகஸ்டா (36) என்பவருடன் 20 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தார்.

  இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை அடில்லா (தற்போது இவருக்கு 13 வயது). கடந்த 2011-ம் ஆண்டில் மார்ட்டின், ஆராய்ச்சி படிப்பிற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்குள்ள குடியிருப்பில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

  இதற்கிடையே அதே ஆண்டில் செசில்லா அகஸ்டா, கேரளாவில் பிரபலமான மோகினி நடனத்தை கற்பதற்காக கேரளாவில் திருச்சூருக்கு வந்தார். அங்கு தங்கி இருந்த அவர், தனது குழந்தையை பார்ப்பதற்காக அடிக்கடி விருதுநகர் மாவட்டத்துக்கு வந்து சென்றுள்ளார்.

  2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்த அவர், மகள் அடில்லாவுடன் இனி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதாக மார்ட்டினிடம் தெரிவித்தார். இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின், செசில்லாவை கடுமையாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதையடுத்து அவரது உடலை பெரிய ‘டிராவல் பேக்’கில் வைத்து தனது காரில் போட்டுக்கொண்டார். காரை எடுத்துக் கொண்டு பல இடங்களில் சுற்றிவந்தார்.

  அடுத்த நாள் மதுரை தோப்பூர் கண்மாய் பகுதிக்கு சென்று, பிணத்துடன் டிராவல் பேக்கினை வீசி, அதில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பினார்.

  இதுதொடர்பாக தெரியவந்ததை தொடர்ந்து, மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே தனது மனைவி மாயமாகிவிட்டதாக மார்ட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அவர்களும் விசாரித்து வந்தனர்.

  இந்தநிலையில் மார்ட்டின் பயன்படுத்திய காரின் ஒரு பாகம் தோப்பூர் கண்மாய் பகுதியில் கிடைத்தது. அதன் மூலம் துப்புதுலக்கி, மார்ட்டினை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தனது மனைவி செசில்லாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரது மகள் அடில்லா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

  இதுகுறித்த தகவல் அறிந்ததும், மெக்சிகோவில் இருந்த அவரது பாட்டி மதுரை வந்து, அடில்லாவை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிட்டார். மார்ட்டினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது.

  இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சிறப்பு அரசு வக்கீலை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று செசில்லாவின் தாயார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

  அதை விசாரித்து, சிறப்பு அரசு வக்கீலை ஐகோர்ட்டு நியமித்தது. அதன்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், மார்ட்டினுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோவன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி நேற்று மார்ட்டின் கோர்ட்டில் ஆஜரானார். அவரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×