என் மலர்

  செய்திகள்

  தனிமைப்படுத்துதல்
  X
  தனிமைப்படுத்துதல்

  சேலம் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட 130 பகுதிகளில் உள்ள 5588 வீடுகளில் இருந்து 22 ஆயிரத்து 471 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது.

  மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 403 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 282 பேர். அவர்கள் அனைவரும் சேலம், ஆத்தூர், மேட்டூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 160 பேர் இறந்துள்ளனர்.

  இதற்கிடையே சேலம் மாநகரில் 60 வார்டுகளிலும் 136 இடங்களில் தினமும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

  குறிப்பாக செவ்வாய்ப்பேட்டை, சின்னதிருப்பதி, பொன்னம்மாபேட்டை தாதம்பட்டி, நாமமலை, தாதகாப்பட்டி, ஸ்ரீரங்கன் தெரு, குறிஞ்சி நகர், ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  இதையடுத்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சேலம் மாநகரில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவ பரிசோதனை, முகாம்களையும், தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

  மாவட்டத்தில் இதுவரை 1.83 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகரில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் 55 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தது.

  ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி மாநகரில் 130 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள 5588 வீடுகளில் இருந்து 22 ஆயிரத்து 471 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
  Next Story
  ×