என் மலர்

  செய்திகள்

  விநாயகர் சிலை
  X
  விநாயகர் சிலை

  தடைகளை மீறி வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசி, செங்கோட்டையில் தடையை மீறி இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  தென்காசி:

  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதனை பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.

  இந்நிலையில் தடையை மீறி தென்காசி, செங்கோட்டையில் தடையை மீறி இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி சாலையில் பாதாள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை வைத்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

  இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
  Next Story
  ×