search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் செல்லும் வாய்க்காலை கலெக்டர், பாஸ்கர் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு
    X
    மழைநீர் செல்லும் வாய்க்காலை கலெக்டர், பாஸ்கர் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு

    கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது- கலெக்டர் பேட்டி

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது கட்டுக்குள் இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொசவம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீசாணம், வேட்டாம்பாடி வழியாக வேட்டாம்பாடி ஏரிக்கு செல்கிறது. இந்த தண்ணீர் செல்லும் வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால் மழை பெய்யும் காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் வாய்க்காலை சீரமைத்து தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    துக்க நிகழ்ச்சிகளில் அரசு அறிவித்த சமூக விலகலை பின்பற்றாமல், முககவசம் அணியாமல் பொதுமக்கள் பங்கேற்றது ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகமாக வர காரணமாக அமைந்து விட்டது. இதை தொடர்ந்து கண்காணித்து தொற்று பரவுவதை தடுத்ததால், தற்போது கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது மழைக்காலம் என்பதால் இதர நோய்களையும் எதிர்த்து போராட வேண்டி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இந்த ஆண்டில் 2 மாதங்களில் ஒருவருக்கு மட்டுமே டெங்கு உறுதியானது. அந்த நபரும் குணமாகி வீடு திரும்பி விட்டார். இதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் முக்கிய காரணம் ஆகும். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் லேசான பாதிப்பு உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் மெகராஜ் புதுச்சத்திரம் ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    Next Story
    ×