என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 842 பேர் மீட்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 842 பேர் குணமடைந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 174 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்தனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 842 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது.
Next Story






