என் மலர்tooltip icon

    செய்திகள்

    முறையிட்ட காட்சி
    X
    முறையிட்ட காட்சி

    புதுக்கோட்டையில் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்

    மத்திய அரசின் அறிவிப்பை செயல்படுத்த வலியுறுத்தி அனைத்தது கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதித்த மக்களிடம் கடன்களை திருப்பிக்கேட்டு நிதி நிறுவனங்கள் துன்புறுத்துவதை  நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வருகிறது.  கடனை கட்ட மத்திய மாநில அரசுகள் அவகாசம் வழங்கிய பிறகும் மக்களை துன்புறுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் வரும் ஜூன் 9ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளும் இணைந்து நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.   

    09.06.2020 அன்று நடைபெற உள்ள போராட்டத்தின் சுவரொட்டியை நேற்று இரவு ஒட்டும்போது  அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்துறை.

    இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  இன்று சென்று முறையிட்டனர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் தனிப்பிரிவு அலுவலகத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டரிடம் போராட்டத்தின் கோரிக்கையின் உண்மை நிலைகளை எடுத்து உரைத்தார்கள்..

    அப்போது பொது இடத்தில் சுவரொட்டி ஒட்டுவது குற்றமான செயல் அதனால் உங்களை தடுத்து நிறுத்தினோம் என்று சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

    பூட்டு போடும் போராட்டம்  போஸ்டர்

    பொது இடத்தில் பொது மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து சுவரொட்டி ஒட்டினால் தவறு என்று சொல்லும் காவல்துறையினர்களின் கருத்திற்கு நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.  பின்னர் சுவரொட்டிகளை மட்டும் கைப்பற்றி  வழக்கைப் போட்டது காவல்துறை.

    இந்நிலையில் திட்டமிட்டபடி அறிவித்த 9ம் தேதியில் போராட்டம் நடைபெறுமென்று அனைத்துக் கட்சிகளும் உறுதிபட தெரிவித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் மற்றும் மக்களுக்கான போராட்டக்களத்தில் திருநங்கைகளும் களமிறங்குகிறார்கள்  என்று போராட்டக்காரர்கள் உறுதியாக தெரிவித்தார்கள். 
    Next Story
    ×