என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
ஈரோட்டில் 11-வது நாளாக கொரோனா தொற்று இல்லை
கடந்த 11 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது. இவர்களில் கடந்த 22-ந் தேதி வரை 65 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். ஒரு முதியவர் மட்டும் இறந்தார். மீதமுள்ள 4 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதன் பின்னர் கடந்த 11 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த 20-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை அதாவது 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள்.

Next Story