search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    வேலூரில் 72 போலீசாருக்கு கொரோனா சோதனை

    வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 72 போலீசாருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீசாருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன்படி, வேலூர் மாவட்ட போலீசாருக்கான கொரோனா பரிசோதனை வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நடந்தது. இதில் முதல் கட்டமாக 72 போலீசாருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

    தொடர்ந்து ஒதுக்கப்படும் ரேபிட் கிட் கருவிகளை பொறுத்து படிப்படியாக அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×