என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    கூட்டத்தை தவிர்க்க விழாக்களை ரத்து செய்யுங்கள்- நாராயணசாமி வேண்டுகோள்

    புதுவையில் கூட்டத்தை தவிர்க்க விழாக்களை ரத்து செய்யுங்கள் என்று அனைத்து மதத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 14-ந் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் 90 சதவீதத்தினர் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்களை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

    ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பிரதமர் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் வெளியில் கடன் பெறும் தொகை அளவை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கேட்டுள்ளனர்.

    தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை 3 மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் 3 மாதத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த பிரதமர், கோரிக்கைகள் தொடர்பாக ஓரிருநாட்களில் முடிவுகளை தெரிவிப்பதாக கூறினார். கொரோனா பாதிப்புகளை பச்சை, ஆரஞ்சு, சிகப்பு என பிரித்து படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    புதுவை சார்பில் நான் பேச பிரதமரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் நிவாரணமாக ரூ.300 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.995 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பேன். வருகிற 14-ந் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் புதுவையை ஒட்டி தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் உள்ளது. எனவே நாம் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழகத்தில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

    இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். மத்திய அரசும் சில விதிமுறைகளை தருவதாக கூறியுள்ளது. அமைச்சரவை முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

    தற்போது விழாக்காலம் என்பதால் விழாக்களை ரத்து செய்து, மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அனைத்து மதத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×