search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாநகர சாலை
    X
    நெல்லை மாநகர சாலை

    நெல்லை மாநகரில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை... ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கிய காவல்துறை

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலி மாநகரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
    நெல்லை:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரலாம், வாகனத்தில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் தேவையற்ற காரணங்களுக்காக வாகனங்களில் செல்வது அதிகரித்துள்ளது.

    இதனை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாகவும், திருநெல்வேலி மாநகரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

    திருநெல்வேலி மாநராட்சிக்குள் இன்று முதல் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் தவிர மற்றவர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

    பொதுமக்கள் 2 கிலோ மீட்டருக்கு உள்ளேயே தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    பால், மருந்து, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசின் உத்தரவுப்படி காலை 6மணி முதல் மதியம் 1மணி வரை மட்டுமே செயல்படும்.  பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவுக்கு முழுவதுமாக ஒத்துழைத்து இந்த வைரஸ் நோய் மேலும் பரவாமல் இருக்க பூரண ஒத்துழைப்பு அளிக்க காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×