என் மலர்
செய்திகள்

தற்கொலை
கவுந்தப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே மாணக்காவலசு கிராமத்தில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி கவிதா (வயது 34). இவர்கள் கடந்த 14 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முருகேசனுக்கு குடி பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்படும். சம்பவத்தன்று முருகேசன் குடித்து விட்டு வரவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. கணவனிடம் கோபித்துக்கொண்டு கவிதா வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.
முருகேசன் அவரது மகன் இருவரும் சேர்ந்து கவிதா அறையை தட்டினர். கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு கவிதா பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கவுந்தப்பாடி போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கவிதாவின் தந்தை துளசிமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story