என் மலர்
செய்திகள்

கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பஸ்சில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.
ஈரோடு மாவட்ட எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
காரப்பள்ளம் சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ், லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.
குறிப்பாக கர்நாடக, கேரளா மாநிலங்களில் கொரோனா அறிகுறியுடன் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடக, கேரளா செல்லும் வாகனங்களுக்கு 12பேர் கொண்ட குழுவினர் நியமித்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
அதேபோன்று கர்நாடக, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக ஆசனூர் திம்பம் மலைப்பாதை உள்ளது.
இங்குள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ், லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரானா வைரஸ் தடுப்பு துண்டுபிரசுராங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story