என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்- காஞ்சிபுரம் என்ஜினீயர் குணம் அடைந்தார்
காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு எடுக்கப்பட்ட 2-வது மருத்துவ பரிசோதனையில் அவர் குணமாகி விட்டதாக முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஓரிரு நாட்களில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார் என்று மருத்துவமனையின் டீன் ஜெயந்தி கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 28-ந்தேதி சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் அவரை அனுப்பி விட்டனர்.
பின்னர் அவருக்கு காய்ச்சல், இருமல் வைரஸ் அறிகுறி இருந்ததால் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியல் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனே ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை முடிவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இதுதான் முதல் பாதிப்பாக கருதப்பட்டது. தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு மீண்டும் ரத்த மாதிரி எடுத்து வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு மருத்துவமனையில் எடுத்த பல்வேறு சோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருந்தது. அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்தாலும் முறையான ஆய்வுக்கு பிறகுதான் தெரிவிக்க வேண்டும்.
என்ஜினீயருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மீண்டும் கிண்டி கிங் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.
இரவில் வந்த பரிசோதனை முடிவில் அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி இருப்பது தெரிய வந்தது. 2-வது முறையாகவும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவிலும் ‘நெகட்டிவ்’ என முடிவு உறுதியானது.
2 சோதனையிலும் அவர் குணமாகி விட்டதாக உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புகிறார்.
இதுகுறித்து மருத்துவ மனையின் டீன் ஜெயந்தி கூறுகையில், “என்ஜினீயருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் குணமாகி விட்டதாக முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஓரிரு நாட்களில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார். தற்போது அவர் நன்றாக உள்ளார்” என்றார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரும் தற்போது குணமாகி விட்டார். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

Next Story