என் மலர்
செய்திகள்

கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட காட்சி.
சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்க கேமரா பொருத்தம்- வனத்துறையினர் நடவடிக்கை
டி.என்.பாளையம் அருகே சிறுத்தையை பிடிக்க கரும்பு தோட்டம் மற்றும் வாழை தோட்டத்தில் வனத்துறை சார்பில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம், பெரியகொடிவேரி, கவுண்டன்புதூர் (ஏழூர்) போன்ற கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக ஆடு, மாடு மற்றும் நாய் என கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று வேட்டையாடி வருகிறது.
இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க கரும்பு தோட்டம் மற்றும் வாழை தோட்டத்தில் வனத்துறை சார்பில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி கிராம மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்று தண்டூரா போடப்பட்டுள்ளது.
Next Story






