என் மலர்

  செய்திகள்

  ஐகோர்ட் மதுரை கிளை
  X
  ஐகோர்ட் மதுரை கிளை

  மேலவளவு கொலை வழக்கு - எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேலவளவு கொலை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  மதுரை:

  மதுரை மாவட்டம், மேலவளவு கிராமத்தில் 1997-ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேர் கொலை செய்யப்பட்டனர்.

  இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் உறுதி செய்தன.

  இந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான அரசாணை நகல் கேட்டு மூத்த வக்கீல் ரத்தினம், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  அதை விசாரித்த ஐகோர்ட்டு, அரசாணையையும், வழக்கு ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

  இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆஜராகி 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணை மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

  அப்போது மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சூப்பிரண்டு ஊர்மிளா ஆகியோரும் ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதிகள் மேலவளவு கொலை கைதிகள் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினர்.

  அதன் பிறகு இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 13 பேரையும் வழக்கின் எதிர்மனுதாரர்களாக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது என்று அறிவித்தனர்.

  மேலும் வழக்கு விசாரணையை இன்று (25-ந் தேதிக்கு) ஒத்திவைத்தனர்.

  அதன்படி வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்தவெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேலவளவு கொலை வழக்கில் முன் கூட்டியே விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

  மேலும் இந்த நோட்டீசை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டின் பொறுப்பு என்றும் அரசின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி கூறி வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  Next Story
  ×