என் மலர்

  செய்திகள்

  பாபநாசம் அணை
  X
  பாபநாசம் அணை

  பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது.
  நெல்லை:

  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையும், கன மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகிறது.

  மழை

  அனைத்து பகுதிகளிலும் விவசாய வேலை மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டிணம் பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1337 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 488 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

  இதனால் நேற்று 138.60 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து இன்று காலை 139.90 அடியாக இருந்தது. இன்று பிற்பகல் அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியது. அணை நிரம்ப இன்னும் 3 அடி நீர்மட்டம் மட்டுமே தேவை. மழை தொடரும் பட்சத்தில் இன்னும் 2 நாட்களில் நிரம்பி விடும். சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 151.31 அடியாக உள்ளது. அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்ட 5 அடியே இருக்கிறது. அந்த அணையும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 873 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 74.80 அடியாக உள்ளது.

  அடவிநயினார், குண்டாறு, கடனாநதி அணைகள் நிரம்பி வழிகிறது. ராமநதி, கருப்பாநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணைகள் மாறி மாறி நிரம்பி வருகிறது. கொடுமுடியாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளில் மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.

  Next Story
  ×