search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
    X
    கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

    செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது - அமைச்சர் பாஸ்கரன்

    மாணவர்கள் எங்கு பார்த்தாலும் கையில் செல்போன் வைத்துக்கொண்டு அதனுடன் நேரத்தை செலவு செய்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

    அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:-

    தற்போதைய மாணவர்கள் எங்கு பார்த்தாலும் கையில் செல்போன் வைத்துக்கொண்டு அதனுடன் நேரத்தை செலவு செய்கின்றனர். இன்னும் சிலர் அந்த செல்போனுடன் ‘புளு டூத்’ உபகரணத்தை காதில் மாட்டிக் கொண்டு தனியாக பேசியபடி சிரித்துக்கொண்டே செல்கின்றனர்.

    செல்போனுடன் மாணவர்கள்

    இதையெல்லாம் பார்க்கும்போது செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது. செல்போன் என்பது நமக்கு மற்றவர்களிடம் தகவல்களை பரிமாற்றுவதற்கான சாதனம். ஆனால் அந்த சாதனத்தால் கலாசார சீரழிவுகளில் சிக்கி மாணவ-மாணவிகள் உள்பட பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே செல்போனை தங்களது தேவைக்காக மட்டும் பயன்படுத்தி பிற தவறான விஷயங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×