என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.72 அடியாக உயர்வு
Byமாலை மலர்23 Oct 2019 3:50 AM GMT (Updated: 23 Oct 2019 6:12 AM GMT)
வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை 46.72 அடியாக உயர்ந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பாக 44.50 அடியாக ஏரியின் நீர் இருப்பு குறைந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில், கீழணையில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. இன்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக 340 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.53 அடியாக இருந்தது. இன்று 46.72 அடியாக உயர்ந்தது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இன்று 54 கன அடிதண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு 19கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Next Story
×