search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான போலீஸ்காரர் அருள்.
    X
    கைதான போலீஸ்காரர் அருள்.

    பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- போலீஸ்காரர் கைது

    வேதாரண்யம் அருகே வேன் டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 30). இவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மருதூர் மாடிக்கடை பகுதியில் போலீஸ்காரர் அருள் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் டிரைவர் பிரகாசிடம் வண்டி ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினார். பிறகு திடீரென அவரிடம் இருந்த செல்போனையும், ரூ.500 பணத்தையும் பறித்துக்கொண்டார்.

    இதேபோல் மற்றொரு வேன் டிரைவர் சக்திவேல் என்பவரிடம் போலீஸ்காரர் அருள் , செல்போனை பறித்து கொண்டு வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் சென்று அருள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேசினார். பிறகு பன்னாள் பகுதியை சேர்ந்த ஒருவர் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி வருவதாகவும், அதை வாங்கி தருமாறும் அருள் கூறினார்.

    இதை கேட்ட இன்ஸ் பெக்டர் சுகுணா, பணம் கொடுத்ததற்கான ஆவணங்களை காண்பித்தால் பணத்தை பெற்று தருவதாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் அருள், இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தகராறு செய் தார். அப்போது அவர் ஆவேசத்துடன் போலீஸ் நிலையத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் அருளிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிகொடுத்த வேன் டிரைவர்கள் பிரகாஷ், சக்திவேல் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் 2 பேரும், இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் சென்று, போலீஸ்காரர் அருள் தங்களிடம் செல்போன்- பணத்தை பறித்த சம்பவத்தை தெரிவித்தனர்.

    இதையடுத்து அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் அருள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×