என் மலர்

  செய்திகள்

  சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  X
  சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  சுதந்திர தினம்- சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  ஆலந்தூர்:

  சுதந்திர தினத்தையொட்டி சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

  இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  விமான பயணிகள் வழக்கமாக சோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது, உடமைகள், ஆவணங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  பார்வையாளர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளியே விமான நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய பகுதிகளில் ஜீப்புகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். வருகிற 20-ந் தேதிக்கு பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  Next Story
  ×