என் மலர்

  செய்திகள்

  நீதிமன்றம்
  X
  நீதிமன்றம்

  7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 68 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 68 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் அஷ்ரப்அலி (வயது 68). இவர் அந்த பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கடந்த 3-9-2018 அன்று ஆலங்குடி போலீசார் அஷ்ரப் அலி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அஷ்ரப் அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.7 லட்சத்தை அஷ்ரப் அலி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
  Next Story
  ×