என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பெண்ணாடம் அருகே இன்று காலை வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

    பெண்ணாடம் அருகே இன்று காலை வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண்ணாடம்:

    அரியலூர் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 52). லாரி டிரைவர்.

    இவர் இன்று அதிகாலை தனது மொபட்டில் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். பெண்ணாடத்தை அடுத்த பெரிய கொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மொபட்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆதிமூலம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆதிமூலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×