என் மலர்

  செய்திகள்

  அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை
  X

  அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அம்பத்தூர்:

  அயனாவரம் பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் துரைசாமி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார்.

  நேற்று இரவு இவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்த போது கல்லாவிலிருந்த சீட்டு பணம் ரூ.40,000 மற்றும் மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் கோபி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  அயனாவரம், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் பூட்டி உள்ள கடைகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் வியாபாரிகளிடடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×