search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பல இடங்களில் மின்சார தடை - பொதுமக்கள் அவதி
    X

    சென்னையில் பல இடங்களில் மின்சார தடை - பொதுமக்கள் அவதி

    சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சென்னை:

    சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மின்சாரம் இருந்தும் பல இடங்களில் வோல்டேஜ் பிரச்சினையும் இருந்ததால் நிலையான மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் டி.வி., மின்விசிறி, பிரிட்ஜ் ஆகியவை இயங்கவில்லை. இதுவும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.

    எண்ணூர் முதல் தி.நகர் வரையிலான பகுதிகளில் மின்தடை காரணமாக பொது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    எண்ணூரில் உள்ள மின் நிலையத்தில் இருந்து 400 கிலோ வாட் மற்றும் 230 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படும். மின்சாரம் மின் கோபுரங்கள் வழியாக மின் பகிர்மான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதில் சில மின் கோபுரங்களில் உள்ள மின் கடத்திகளில் ஏற்பட்ட பிரச்சினையால் மின் தடை ஏற்பட்டது.

    மணலி, அலமாதி, வல்லூர் ஆகிய மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் 400 கிலோ வாட் மற்றும் 110 கிலோ வாட் மின் உற்பத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு பாதிக்கப்பட்டது. இவை சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், நள்ளிரவு ஏற்பட்ட மின்தடை பலமணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை தான் சரி செய்யப்பட்டது. இதனால் இரவில் மக்கள் தூக்கமின்றி தவித்ததாக திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கூறினர்.

    சோளிங்கநல்லூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வோல்டேஜ் பிரச்சினை இருந்தது. பள்ளிக்கரணை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×