என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே காரில் ஏ.சி. போட்டு தூங்கிய தனியார் நிறுவன மேலாளர் பலி
ஈரோடு அருகே இன்று காலை காரில் ஏ.சி.போட்டு தூங்கிய தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காமலாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் (வயது44). இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.
அனந்தகிருஷ்ணன் ஈரோடு ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அனந்த கிருஷ்ணன் ஊரில் உள்ள தனது தாயாருக்கு போன் செய்து நான் இன்று ஊருக்கு வருவதாக கூறினார். தனது நண்பர் கார் மூலம் அனந்தகிருஷ்ணன் திருச்சிக்கு புறப்பட்டு உள்ளார். பின்னர் 12 மணி அளவில் மனைவி விஜயலட்சுமி அனந்தகிருஷ்ணனுக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
மாலை 6.30 மணி அளவில் அனந்தகிருஷ்ணன் ஈரோடு முத்துக்கவுண்டன் பாளையம் - பரிசல் துறை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தபோது அசதி காரணமாக சாலையோரம் காரை நிறுத்தி ஏசி போட்டு தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story