என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவிலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி
காட்டுமன்னார்கோவிலில் குடும்ப தகராறு காரணமாக 3 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 38). விவசாயி. இவரது மனைவி கயல்விழி(30). இவர்களுக்கு 3 வயதில் சிவதரஷினி என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்தநிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை தமிழ்செல்வனுக்கும், கயல்விழிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கயல்விழி மனவேதனை அடைந்தார். சிறிது நேரத்தில் தமிழ்செல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றார். கயல்விழி வீட்டில் அழுது கொண்டே இருந்தார். கணவர் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்பு தான் இறந்து விட்டால் தனது 3 வயது பெண் குழந்தை அனாதையாகி விடுமோ என்று கருதினார்.
பின்பு அவர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். பின்பு கயல்விழி மனதை கல்லாக்கி கொண்டு தான் பெற்ற குழந்தையான சிவதரஷினிக்கு விஷம் கொடுத்தார். பின்பு கயல் விழியும் அந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் தாயும், மகளும் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சிவதரஷினி பரிதாபமாக இறந்தார்.
கயல்விழியின் நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story