search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் பராமரிப்பு பணி தனியாருக்கு விடப்படுகிறது
    X

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் பராமரிப்பு பணி தனியாருக்கு விடப்படுகிறது

    மாதவரம்- சிறுசேரி 2-வது கட்ட மெட்ரோ ரெயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரை சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி 52 கி.மீட்டர் வழித்தட பாதை திட்டப்பணிகள் ரூ.69,180 கோடியில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும், வட சென்னை- தென் சென்னை பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது.

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் இயக்கம், மற்றும் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு விட மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2-வது கட்டமாக உருவாக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பராமரிப்பு, இயக்க பணிகள் அனைத்தும் தனியார் ஊழியர்கள் நிர்வகிக்கிறார்கள். மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் தனியார் மூலம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னை மெட்ரோ 2-வது கட்ட வழித்தட பாதை ரெயில் நிலையங்களும் தனியார் பராமரிப்பு பணிக்கு விடப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகிறது.

    Next Story
    ×