என் மலர்

  செய்திகள்

  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மணிகண்டனை போலீசார் அழைத்து வந்தனர்.
  X
  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மணிகண்டனை போலீசார் அழைத்து வந்தனர்.

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை- சரணடைந்த வாலிபருக்கு 4 நாட்கள் சிபிசிஐடி காவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சரணடைந்த வாலிபரை 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #PollachiCase
  கோவை:

  பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 20), வி.கே.வி. லே-அவுட் பகுதியை சேர்ந்த பாபு (24), சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (33), பார் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  இதில் பார் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மணிவண்ணன் என்ற மணிகண்டன் கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்தார்.

  இந்நிலையில் கடந்த 25-ந்தேதி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன்பு மணிகண்டன் சரணடைந்தார். நீதிபதி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  இந்நிலையில் நேற்று ஜாமீன் கேட்டு மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

  இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் உள்ள மணிகண்டனை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு இன்று மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 4 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

  விசாரணைக்கு பின்னர் திங்கட்கிழமை மாலை மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். #PollachiCase #CBCID

  Next Story
  ×