என் மலர்

  செய்திகள்

  மதுரை கம்யூ. வேட்பாளருக்கு வாக்கிங் சென்றபடி வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்
  X

  மதுரை கம்யூ. வேட்பாளருக்கு வாக்கிங் சென்றபடி வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கிங் சென்றபடி வாக்கு சேகரித்தார். #MKStalin #DMK

  மதுரை:

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வண்டியூர், திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

  அப்போது மோடி, எடப்பாடி அரசை கடுமையாக சாடினார். பிரசாரத்துக்கு பின்னர் மதுரையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.

  இன்று காலை மு.க.ஸ்டாலின் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நடந்து சென்றபடியே வியாபாரிகள், பொதுமக்களிடம் மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.  மு.க.ஸ்டாலினுடன் சென்ற வேட்பாளரை அறிமுகம் செய்து இவரை வெற்றி பெறச் செய்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றார்.

  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 14 வயதில் அரசியலுக்கு வந்த நான் எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன்.

  எம்.எல்.ஏ. மேயர், தி.மு.க. தலைவர் என எப்போதும் மக்களோடு இருந்து வருகிறேன். தேர்தலின் போது மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களுக்கு சேவை செய்வோம் என்றார். #MKStalin #DMK

  Next Story
  ×