search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை பாராளுமன்ற காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீர் ஆதரவு
    X

    சிவகங்கை பாராளுமன்ற காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீர் ஆதரவு

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். #karthichidambaram #congress #sudharsananatchiappan

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    நிருபர்களிடம் அவர் கூறும்போது, நான் தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து நிறுத்திவிட்டார். மேலும் கட்சியிலும் பொறுப்புகள் கிடைக்க விடாமல் செய்தார். மொத்தத்தில் எனது வளர்ச்சியை தடுத்து விட்டர்.

    ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். கோர்ட்டுக்கு போக வேண்டியவர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப் போவது உண்மை என்றார்.

    இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் அலுவலகத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீரென வந்தார். அவரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி வரவேற்றார்.

    சுதர்சன நாச்சியப்பன் கட்சி அலுவலகத்துக்கு வந்தது குறித்து புதுவயலில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த கார்த்தி சிதம்பரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காரைக்குடி தேர்தல் அலுவலகத்துக்கு வந்து சுதர்சனநாச்சியப்பனை சந்தித்தார்.

    அதன்பின்னர் சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இங்கு நடைபெறுகிறது என்பதை அறிந்து ஒரு தொண்டனாகவே இங்கு வந்தேன். காங்கிரசுக்கு எதிராக தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனை மக்கள் நம்ப வேண்டாம். கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவேன். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.  #karthichidambaram #congress #sudharsananatchiappan

    Next Story
    ×