என் மலர்
செய்திகள்

மதுரவாயல் ஏடிஎம் பணம் கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது
போரூர்:
மதுரவாயலை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகரில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த மாதம் 7-ந்தேதி பணம் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்களான தேவராஜ், முரளி ஆகியோர் வந்தனர்.
அப்போது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் தாக்கி ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
40 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய நைஜீரியாவைச் சேர்ந்த அக்யோ மாயே. ஆமு மற்றும் சென்னை மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரேயா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி மைசூர் சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெரல் என்பவரை இன்று காலை கைது செய்தனர்.
இதில் அக்யோ மாயே மற்றும் பெரல் இருவரும் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து பின்னர் பாதியிலேயே வெளியேறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.






