என் மலர்

  செய்திகள்

  மிளகாய்பொடி வீட்டுக்குள் சிதறிகிடக்கும் காட்சி- கொள்ளையனால் தாக்கப்பட்ட ஜெயக்கொடி
  X
  மிளகாய்பொடி வீட்டுக்குள் சிதறிகிடக்கும் காட்சி- கொள்ளையனால் தாக்கப்பட்ட ஜெயக்கொடி

  ஸ்ரீமுஷ்ணத்தில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை கொள்ளை- மர்ம வாலிபர் கைவரிசை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று அதிகாலை வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஸ்ரீமுஷ்ணம்:

  கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவர் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (45). இன்று அதிகாலை 5 மணி அளவில் மனோகரன் எழுந்து வீட்டின் கதவை பூட்டாமல் அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். வீட்டில் ஜெயக்கொடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் முகமூடி அணிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று மனோகரின் வீட்டுக்குள் புகுந்தார்.

  பின்னர் அவர் அங்கு தூங்கி கொண்டிருந்த ஜெயக்கொடியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஜெயக்கொடி அதிர்ச்சியடைந்து கூச்சல்போட முயன்றார்.

  இதனால் ஆத்திரமடைந்த மர்ம வாலிபர் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை ஜெயக்கொடியின் முகத்திலும், வீட்டிலும் தூவினான். பின்பு அவர் கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்தான்.

  இதில் பாதி சங்கிலி ஜெயக்கொடி கையிலும், பாதி நகை மர்ம வாலிபர் கையிலும் சிக்கியது. பின்பு அவன் அங்கிருந்து தப்ப முயன்றான். ஆனால் ஜெயக்கொடி அவன் தப்பி ஓடி விடாமல் இருக்க அவனது 2 கால்களையும் பிடித்துக் கொண்டார்.

  இதனைத்தொடர்ந்து மர்ம வாலிபர் ஜெயக்கொடியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து தாக்கினான். தாக்குதலில் காயமடைந்த ஜெயக்கொடி மயங்கிவிழுந்தார். அதன் பின்பு கொள்ளையன் பறித்த 6 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

  டீ குடிக்க சென்ற மனோகரன் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும், மனைவி ஜெயக்கொடி மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார். அதன்பின்பு எழுந்த ஜெயக்கொடி கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கி தாலிசங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

  இதுகுறித்து மனோகரன் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.

  கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜெயக்கொடி ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×