என் மலர்

  செய்திகள்

  மதுரை கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  X

  மதுரை கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. #Kallalagartemple #MaduraiHC
  மதுரை:

  சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘மதுரை கள்ளழர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பல சொத்துக்கள் தனி நபர்களின் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, கோவில் சொத்துக்களை மீட்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை கள்ளழகர் கோவில் மற்றும் கோவிலைச் சேர்ந்த மலைப்பகுதியில் மது அருந்த தடை விதித்து உத்தரவிட்டனர். கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

  மேலும் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகப்படிகள் உள்ளன? எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அவற்றை நிர்வகிப்பது யார்? எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பிப்ரவரி 26-ம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #Kallalagartemple #MaduraiHC

  Next Story
  ×