search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் நேரடி மெட்ரோ ரெயில்
    X

    சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் நேரடி மெட்ரோ ரெயில்

    சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் நேரடி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. #MetroTrain #ChennaiAirport
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமானநிலையம்வரை, உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை 10 கி.மீ சுரங்க வழித்தட பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 45 கி.மீ தூரத்துக்கான முதல்கட்ட ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. ஏற்கனவே சென்ட்ரலில் இருந்து எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக நேரடி மெட் ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    50 நிமிடங்களில் நேரடியாக பயணிகள் விமான நிலையத்தை சென்றடைந்து விடுவார்கள். இதனால் பொதுமக்கள், பயணிகள் இடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்ட்ரலில் இருந்து விமானநிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நேருபார்க், செனாய்நகர், அண்ணாநகர், வடபழனி, ஆலந்தூர் வழியாக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது. டி.எம்.எஸ்-வண்ணாரப் பேட்டை வழித்தட பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    இதையொட்டி சென்ட்ரலில் இருந்து விமானநிலையத்துக்கு அண்ணாசாலை, டி.எம்.எஸ், சின்னமலை, வழியாக நேரடி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. இதனால் 2 வழித்தடங்கள் மூலம் நேரடியாக விமான நிலையத்தை பயணிகள் எளிதில் சென்றடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #ChennaiAirport
    Next Story
    ×