என் மலர்

  செய்திகள்

  புதுவையில் தியாகிகள் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் - நாராயணசாமி அறிவிப்பு
  X

  புதுவையில் தியாகிகள் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் - நாராயணசாமி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
  புதுச்சேரி:

  புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

  விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி தியாகிகளை கவுரவித்து இனிப்புகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

  புதுவை மாநிலத்துக்கு வணிக வரி, கலால் வரி மூலம் நிதி கிடைக்கிறது. சுற்றுலாவில் இருந்து பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. புதுவை, இந்தியாவுடன் இணைந்தபோது 90 சதவீதம் மானியம் கிடைத்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது 26 சதவீதமாகி விட்டது.

  மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி மானியத்தில் ரூ.1,650 கோடி மட்டுமே பெறுகிறோம்.  மத்திய அரசிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய கடமை பொறுப்பு உள்ளது. அரசின் சிக்கன நடவடிக்கையால் மக்கள் நலத்திட்டங்களை முடிந்தவரை செயல்படுத்தி வருகிறோம்.

  தியாகிகள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்து அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy

  Next Story
  ×