என் மலர்

  செய்திகள்

  ரெட்டியார்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
  X

  ரெட்டியார்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெட்டியார்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  புதுச்சேரி:

  புதுவை ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது23). வேலை ஏதும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றி திரிந்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

  இதுபற்றிய தகவலின் அடிப்படையில் புதுவை குழந்தைகள் நல குழுவினர் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவியை செல்வராஜ் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

  இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

  Next Story
  ×