என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி- அமைச்சர் சிவி சண்முகம் தகவல்
அரசு சட்டக்கல்லூரி அமைக்காத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பட்டுக்கோட்டையில் சட்டக்கல்லூரி தொடங்க அரசு முன் வருமா? என்று உறுப்பினர் சி.வி.சேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில் வருமாறு:-
அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அரசு சட்டக்கல்லூரி அமைக்காத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. பட்டுக்கோட்டையில் தனியார் தொடங்க முன் வந்தால் அரசு உரிய அனுமதி வழங்கும். பல நகரங்களில் ஊரின் மையப் பகுதியில் கிளை சிறைச்சாலை உள்ளது. இவற்றை ஊருக்கு வெளியே அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

Next Story