என் மலர்

  செய்திகள்

  இடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக முடிவெடுக்கும் - வைகோ
  X

  இடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக முடிவெடுக்கும் - வைகோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து தி.மு.க. முடிவெடுக்கும் என வைகோ கூறியுள்ளார். #Vaiko #DMK
  மதுரை:

  விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இன்று ம.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

  இதில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  தமிழகத்தில் நடைபெற உள்ள 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவு எடுக்கும். எனினும் 20 தொகுதிகளிலும் தோழமை கட்சியினர் களப் பணியாற்றி வெற்றி பெற பாடுபடுவோம்.

  கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #DMK
  Next Story
  ×