search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை பெய்தாலும் மீட்பு பணிகள் பாதிக்காது - அமைச்சர் உதயகுமார்
    X

    மழை பெய்தாலும் மீட்பு பணிகள் பாதிக்காது - அமைச்சர் உதயகுமார்

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மழையால் மீட்பு பணிகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். #GajaCyclone #RBUdhayakumar
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.  இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்த பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-

    புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு 465 முகாம்கள், 535 மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன. கஜா புயலால் 2,17,935 மரங்கள் சாய்ந்துள்ளன, 91,960 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் மழை பெய்து வருகிறது. மழையால் மீட்பு பணிகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். துண்டிக்கப்பட்ட 58 லட்சம் மின் இணைப்புகளில், 38 லட்சம் இணைப்புகள் சீரானது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    புதுக்கோட்டை மாவட்டத்தில்  நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #RBUdhayakumar
    Next Story
    ×